தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண்மை முறையாக வேளாண் பட்ஜெட் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வேளாண்மை துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களுக்கு 10.53 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு டன்னுக்கு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக 349 ரூபாய் வழங்கப்படும். இதனால் ஒரு டன் கரும்புக்கு விவசாயிகளுக்கு 3500 ரூபாய் வரையில் கிடைக்கும்.மேலும் இதற்காக 297 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.