தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலை ஏற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்ற வருகின்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த விலை ஏற்றம் சாமானிய மக்களை கடுமையாக பாதித்து வருகிறது.

இந்நிலையில் ரேஷன் கடைகள் மற்றும் உழவர் சந்தைகள் மூலம் குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனைப் போலவே கொரோனா காலத்தைப் போல வீடு தேடி காய்கறிகளை விற்பனை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.