மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவோம் என தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்குப்பின் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த 1000 ரூபாய் யாருக்கு கிடைக்கும்? கிடைக்காது? என அறிக்கையும், விளக்கமும் அளித்திருந்தது தமிழக அரசு. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது..

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரி இளம் பகவத் கடிதம் எழுதியுள்ளார். மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட சிஇஓ அவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,  மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களைக் கொண்டு மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவிற்கு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களைக் கொண்டு மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப்பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் வழங்கப்படும் எனவும், விருப்பமில்லாத தன்னார்வலர்களை மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.