இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்தார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார். இந்நிலையில் தற்போது அஸ்வினுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும் ஐபிஎல் போட்டியில் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதேபோன்று முன்னதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசாத் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த குருவாயூர் துரை, தாமோதரன் சீனிவாசன், லட்சுமிபதி ராமசுப்பையர், ஸ்ரீநிவாஸ், புரசை கண்ணப்ப சம்பந்தன், சந்திரமோகன், ராதாகிருஷ்ணன், தேவ சேனாதிபதி, சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு மொத்தம் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.