
இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவரும் இஎஸ்ஐ திருச்சபை பேராயுறமாக இருந்தவர் எஸ்ரா சற்குணம். இவருக்கு 85 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் எஸ்ரா சற்குணம் உடல்நலக் குறைவினால் திடீரென மரணம் அடைந்துள்ளார்.
மேலும் இந்திய சுவிசேஷ திருச்சபை பிரதம பேராயர் எஸ்ரா சற்குணம் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவர் கருணாநிதி, திருமாவளவன், வைகோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமாக அறியப்படுகிறார். இவர் பேராயராக மட்டும் இன்றி அரசியல் ஞானம் உள்ளவராகவும் திகழ்ந்தார். பல நேரங்களில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான தூதுவராக செயல்பட்டுள்ளார். மேலும் கடந்த வருடம் இவருடைய பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.