
ஆசிய விளையாட்டு தொடரின் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா மேலும் ஒரு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை பாலக் தங்கப்பதக்கம் வென்றார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார். அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து வரும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது.