காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலின் காரணமாக பாகிஸ்தான் தற்போது இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், சண்டிகர் உட்பட பல பகுதிகளில்  தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தொடர்ந்து நேற்று மூன்றாவது நாளாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் இந்திய ராணுவம் அதனை வெற்றிகரமாக முறியடித்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் வருகிற 15ஆம் தேதி வரை 32 விமான நிலையங்கள் மூடப்படும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

மேலும் அதன்படி ஆதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகர், பதான் கோட், லே உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.