மத்திய கல்வி அமைச்சகம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவனத் தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னையில் செயல்பட்டு வரும் ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது.

அதன்படி சென்னை ஐஐடி ஒட்டுமொத்த பிரிவில் ‌சிறந்த பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற்றதோடு பொறியியல் பல்கலைக்கழகங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் டாப் 10 பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் தொடர்ந்து 6-வது முறையாக சென்னை ஐஐடி முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.