
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. அதாவது மும்மொழி கல்வி கொள்கை மற்றும் தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது தொகுதி மறுசீரமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 50 வருடங்களாக கல்வி, சுகாதாரம், குடும்ப கட்டுப்பாட்டில் முதலீடு செய்து மக்கள் தொகை வளர்ச்சியை திறம்படகட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களுக்கு தொகுதி மறு சீரமைப்பு என்பது பெரும் தண்டனை என்று கூறியுள்ளார். மேலும் இதோ அந்த அறிக்கை,
#SayNoToDelimitation#TVKForTN pic.twitter.com/SjZWvymKX0
— TVK Vijay (@TVKVijayHQ) March 5, 2025
— TVK Vijay (@TVKVijayHQ) March 5, 2025