தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில் சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்ய இருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம், பெரம்பலூர், விருதுநகர், திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
