ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வெளியான இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் ஆனது. இதே பாடலுக்கு சில தினங்களுக்கு முன் கோல்டன் குளோப் விருது கிடைத்த நிலையில் தற்போது ஆஸ்கரின் பரிந்துரை பட்டியலிலும் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்கர் பட்டியலில் நாமினேட் ஆகும் முதல் இந்தியப் பாடல் இதுவாகும்.