
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக இந்தியா இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளின் முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசியல் மற்றும் ராணுவத் தளத்தில் கடும் அழுத்தங்களை எதிர்கொண்ட நிலையில், பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் தலைமையில் நடத்தப்பட்ட பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில், எதிர்வினை மற்றும் எதிர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு ஆயுதப்படைகள் நடவடிக்கை மேற்கொள்ள முறையான அதிகாரம் வழங்கியுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்ட சூழலில் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் வழங்கி பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.