
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சில முக்கிய கட்சிகளின் பிரமுகர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் அதிமுக கட்சியின் கவுன்சிலர் ஹரிதரன் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கொலையாளிகள் கூவம் ஆற்றில் வீசிய செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஹரிதரனை அதிமுக கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. மேலும் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்குவதாக அறிவித்துள்ளது..