ஆபாசமான காட்சிகளை ஒளிபரப்பியதாக 18 ஓடிடி தளங்களை முடக்கி மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆபாச காட்சிகள் மற்றும் மோசமான உள்ளடக்கத்தை ஒளிபரப்பிய 18 ஓடிடி தளங்களை முடக்கியது மத்திய அரசு. புகாருக்கு ஆளான ஓடிடி தளங்களுடன் தொடர்பில் இருந்த 57 சமூக வலைதள கணக்குகளும் முடக்கப்பட்டன. 57 சமூக வலைதளங்களில் 12 முகநூல் கணக்குகள், 17 இன்ஸ்டாகிராம் கணக்குகள், 16 எக்ஸ் தள கணக்குகள், 12 யூடியூப் கணக்குகள் அடங்கும். ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 19 இணையதளங்கள், 10 செயலிகளையும் முடக்கியது மத்திய அரசு.