
அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி கூறியுள்ளார்.
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழக தாய்மார்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள் உள்ளிட்டோருக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. வாழ்த்து கூறிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள் என த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு அரசியல் பயணத்தை முன்னெடுத்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Thalaivar Vijay's Press Release ♥️ @actorvijay pic.twitter.com/a2bQvm7UQO
— 🥶. (@KuskiOffl) February 4, 2024