தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ள பாமக வேட்பாளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி. 10 தொகுதிகளில் காஞ்சிபுரம் தவிர்த்து 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாமக.

அதன்படி அரக்கோணம் – பாலு, கடலூர் – தங்கர் பச்சான், திண்டுக்கல் – திலகபாமா, ஆரணி – கணேஷ் குமார், மயிலாடுதுறை- ம.க. ஸ்டாலின், கள்ளக்குறிச்சி – தேவதாஸ், தர்மபுரி – அரசாங்கம், சேலம் -அண்ணாதுரை, விழுப்புரம் – முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட பாமக வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பாமக வேட்பாளராக சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.