
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். இவருக்கு தற்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது வழக்கமான பரிசோதனை என்று கூறப்பட்டாலும் திமுக மூத்த தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். மேலும் திடீரென மூத்த அமைச்சர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.