புதுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, எதிர்பாராத விதமாக அங்கு அரங்கேறிய திடீர் மின்வெட்டு ஒட்டுமொத்த அதிகாரிகள் வட்டாரத்தையும் பெரும் அதிர்ச்சியிலும் தர்மசங்கடத்திலும் ஆழ்த்தியுள்ளது.

அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் கோப்புகளைப் பார்வையிட அமைச்சர் வந்திருந்த நிலையில், அவர் ஆய்வுக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த போதே திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த இடமே கும்மிருட்டாக மாறியது. சாதாரணமாக மின்சாரம் போனால் சில நிமிடங்களில் வந்துவிடும் என்று நினைத்த போது, அமைச்சரின் கூட்டத்திலேயே சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து மின்வெட்டு நீடித்ததால் அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.

இந்த விபரீதச் சம்பவம், ஒரு மாநில அமைச்சரின் அரசு ஆய்வுக் கூட்டத்திற்கே இந்த நிலைமை என்றால் சாதாரணப் பொதுமக்களின் நிலை என்ன என்ற ரீதியில் தற்பொழுது சோசியல் மீடியாவில் மாபெரும் விவாதத்தையும், அரசு நிர்வாகத்தின் மீதான பலத்த விமர்சனங்களையும் கிளப்பி செம வைரலாகி வருகிறது.