தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது..

அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து துறை தலைமையகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விமான சேவை பாதிப்பு என தகவல் வெளியாகி உள்ளது. எனவே அமெரிக்காவில் அனைத்து விமானங்களும் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டன. தொழில்நுட்ப கோளாறை முழுவீச்சில் சரி செய்து வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய நிலவரம் குறித்து விமானிகளுக்கும், ஊழியர்களுக்கும் தகவல் அனுப்பும் அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் இருந்து வெளிநாடு செல்லும், வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவரும் 760 விமானங்கள் முடங்கியுள்ளது. விமான சேவை முடங்கியதால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவிக்கின்றனர். தொழில்நுட்ப கோளாறு எப்போது சரியாகும் என்பதால் குழப்பம் நிலவி வருகிறது..