தேர்தல் பிரச்சாரங்களின் போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பெயர் மற்றும் புகைப்படத்தை அன்புமணி ராமதாஸ் தரப்பினர் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, தற்போதைய தேர்தல் பிரச்சாரங்களில் அன்புமணி ராமதாஸ் தரப்பினர், டாக்டர் ராமதாஸின் பெயர், உருவப்படம் அல்லது அவருடைய அடையாளங்களை எந்தவிதத்திலும் பயன்படுத்தக்கூடாது.
இந்தத் தடையானது தற்போதைய தேர்தல் காலத்திற்கு மட்டுமன்றி, வரும் காலத்திற்கும் பொருந்தும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை ஜூன் மாதம் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாமகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமை தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
