பேனா நினைவு சின்னம் அனைத்து துறைகளின் அனுமதியையும் பெற்ற பிறகு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை தரப்பில் பசுமை தீர்ப்பாயத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.. ஒப்புதல் கோரி மத்தியமாநில அரசுத்துறைகளிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க தடை கோரியும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமுறைகளை ஆராயகோரியும் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ராம்குமார் ஆதித்யன் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில்  பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கலைஞர் நினைவிடத்திலிருந்து 650 மீட்டர் தூரத்திலும் மெரினா கடற்கரையிலிருந்து 360 மீட்டர் தொலைவிலும் பேனா நினைவு சின்னமும் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய, மாநில அரசு துறைகளிடம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதாகவும், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறையின் பரிந்துரைகள் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து துறைகளிடமும் இந்த பணிகளுக்காக எந்தெந்த துறைகளிடம் ஒப்புதல் பெற வேண்டுமோ அந்தந்த  அனைத்து துறைகளிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் தான் பணிகள் தொடங்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேனா சின்னம் அமைக்க தடை கோரி வழக்றினர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கில் பொதுப்பணித்துறை இந்த பதிலை அளித்துள்ளது..