கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக, “ திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரே காரணம்” என்று குறிப்பிட்டு, விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தின் விற்பட்டு கிளை செயலாளரான தவெக நிர்வாகி ஐயப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐயப்பனின் உடலும் அவர் எழுதி வைத்த கடிதமும் போலீசாரால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தவெக ஆதரவாளர்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. நிபுணர்கள் தற்கொலை தீர்வல்ல, பிரச்சினைகளை சட்டரீதியாகவும் அமைதியாகவும் சமாளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
