நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பரப்புரையில் இருந்த தமிழ்மணி திடீரென மயங்கி விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வரும் அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்காக நாமக்கல் தொகுதியில் அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.