
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது உள்துறை அமைச்சகம் Z+ பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழங்கும் நிலையில் தற்போது அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் Z+பாதுகாப்பை அமல்படுத்தி அவருக்கான பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளது.
முன்னதாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் கடந்த தேர்தல்களில் கூட்டணி விலகியது. ஆனால் அடுத்த சட்டசபை தேர்தலுக்காக மீண்டும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா கூறுகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தனித்து தான் ஆட்சி அமைப்போம் என்கிறார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தமிழ்நாடு முழுவதும் வாக்கு சேகரிக்கும் பொருட்டு சுற்று பயணத்திற்கு செல்ல உள்ளார். மேலும் இதன் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.