திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏறக்குறைய முடிவடைந்த நிலையில், அதிமுக கூட்டணி முழுமை அடையாமல் உள்ளது. அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாமக, தேமுதிக தற்போது பாஜகவுடன் கூட்டணி பேரம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 கட்சிகளும் பாஜகவுடன் சென்றால், அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, புதிய தமிழகம் கட்சிகள் மட்டுமே இடம்பெறும்