
தமிழகத்தில் பருவமழை காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அவர் கூறுகையில், “வெள்ளத்தால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், சென்னைக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், தங்களுடைய பகுதிகளில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை சீராக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
மழைக்காலங்களில் மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர், மின்சாரம் போன்ற சேவைகளை தடையின்றி வழங்க வேண்டும் என்றார். வெள்ளப்பெருக்கு மற்றும் மழை காரணமாக சீர்குலையும் பகுதிகளில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அரசு இயந்திரம் அவசர உதவிக்காக எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.