
சமீப காலமாக நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சேலம் மாநகர் நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் வைரம் அந்த கட்சியில் இருந்து விலகிவிட்டார்.
சீமான் மீது குற்றச்சாட்டை முன்வைத்து நேற்று தங்கம் உள்பட பல்வேறு மாவட்ட செயலாளர் முக்கிய நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிவிட்டனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இது நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடியாக மாறி உள்ளது. இதனால் சீமான் அதிர்ச்சியில் உள்ளார்.