கேரள மாநிலம் வயநாடு பகுதியில் அடுத்தடுத்து 3 பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து இன்று 6-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை மண்ணில் புதைந்ததில் 357 பேர் உயிரிழந்துள்ளனர்.‌ அதன்பிறகு 200 பேரை காணவில்லை என கேரளா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடர்ந்து பல எண்ணிக்கை என்பது அதிகரித்து வரும் நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வயநாடு நிலச்சரிவினால் 1208 வீடுகள் அளித்துள்ளதாக அறிவிப்பு வெளியாக்கியுள்ளது. மேலும் அந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்த நிலையில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. மேலும் 1208 வீடுகளில் முண்டகை பகுதியில் 540 வீடுகளும், சூரல் மலைப்பகுதியில் 600 வீடுகளும், அட்டமலையில் 68 வீடுகளும் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.