தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக நவம்பர் இரண்டாம் வாரத்தில் பருவமழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத முதலே தமிழ்நாடு, புதுவை உள்ளிட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது. தற்போது வந்த தகவலின் அடிப்படையில் வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.