மணிப்பூரில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்டி இன் மக்களிடையே நடந்து வரும் மோதலால் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஜிரிபாம் பகுதியில் சி ஆர் பி எஃப் படைவீரர்களுடன் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இந்த மோதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவரும் காயமடைந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.