நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது மிகவும் சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் மீது தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில் இதுவரை 60 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதாவது பெரியார் பாலியல் இச்சை வரும்போது தாய் மகள் மற்றும் சகோதரியுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று கூறியதாக சீமான் கூறிய நிலையில் அவருக்கு கண்டனங்கள் என்பது வலுத்து வருகிறது. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சீமானின் கருத்துகள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கிறது என்று நீதிபதிகள் கூறினர். அதன் பிறகு சீமான் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக வருகிற 20-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மதுரை அண்ணாநகர் காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக சீமான் விரைவில் கைதாகலாம் என்று கூறப்படுகிறது.