
தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜூ. இவர் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இவருடைய தயாரிப்பில் சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த கேம் சேஞ்சர், சங்கராந்தி வஸ்துண்ணம் ஆகிய படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் கேம் சேஞ்சர் திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில் சங்கராந்தி வஸ்துண்ணம் படம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் தில்ராஜூ, அவருடைய சகோதரர் சிரிஷ், மகள் ஹன்சிகா ரெட்டி மற்றும் உறவினர்கள் உட்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். தெலுங்கானா மாநிலத்தில் தில்ராஜு மற்றும் அவருடைய உறவினர்களுக்கு சொந்தமான 8-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் சோதனை நடைபெறுகிறது.