பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் ரோகித் செட்டி. இவர் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். இந்த ஷூட்டிங் என்பது கார் ரேசிங் காட்சியை படமாக்கும் போது ரோகித் செட்டிக்கு திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இவரை பட குழுவினர் அருகில் இருந்த மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் ரோகித் செட்டிக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் விரைவில் குணமடைவார் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.