பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான ஜெயபாரதி உடல் நலக்குறைவின் காரணமாக 77 வயதில் காலமானார். இவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு இருந்த நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் குடிசை என்ற திரைப்படத்தின் இயக்குனர்.
தமிழ்நாடு அரசின் 3 விருதுகளை பெற்ற புத்திரன் திரைப்படத்தை கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்கியவர். மேலும் இவர் உடல்நலம் சரியில்லாமல் சென்னையில் உள்ளஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவர் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்