கோலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவி மூலம் அறிமுகமான இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆங்கராக ஆரம்பித்து இன்று தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி உள்ளார். சமீபத்தில் அவரது படமான “அமரன்”மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் நடிகர் சிவகார்த்திகேயன் போடும் பதிவு பிரபலமாகி வருகிறது. தனது மனைவி ஆர்த்தியுடன் ஆன வீடியோவும் நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்தார் அது பெரும் அளவில் வைரலானது.

அதேபோன்று தற்போது தனது அக்காவின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்து போட்ட பதிவும் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதிவில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருந்தார். இந்த பதிவில் கூறியதாவது,”எனது மிகப்பெரிய எடுத்துக்காட்டான எனது அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். 38 வயதாகியும் குழந்தைகள் இருந்த நிலையிலும் நீங்கள் உங்களது இலக்கை நோக்கி தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.

நமது அப்பா உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுவார். உங்களது எல்லா வெற்றிக்கு பின்னாலும் நமது அத்தான் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக நிற்பது மிகவும் பெருமையாக உள்ளது. அத்தானுக்கு மிகவும் நன்றி. என கூறினார். பிறந்தநாள் பரிசாக உயர்ரக மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.