பிரபல நடிகர் ஜெயராமனின் மகனான காளிதாஸ் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடித்த ராயன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கும் மாடலிங் துறையைச் சேர்ந்த தாரினி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். சமூக வலைதளங்களில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் காளிதாஸ் மற்றும் தாரினி திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரீ வெட்டிங் நிகழ்ச்சியில் தனது வருங்கால மனைவியே தாரினியுடன் அழகாக கைகோர்த்து நடிகர் காளிதாஸ் ஜெயராம் வந்தார். இவர்களது திருமணம் குருவாயூர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அவர்களின் திருமணத்திற்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
#KalidasJayaram locked 🔐 pic.twitter.com/GB9n0dwhUR
— Filmy Monks (@filmy_monks) November 10, 2023