தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் சமீபத்தில் தெலுங்கர்கள் குறித்து மிகவும் அவதூறான வகையில் பேசினார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு தெலுங்கு அமைப்புகள் மற்றும் பாஜக கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தற்போது திடீரென தலைமறை வாகிவிட்டார். சென்னை எழும்பூர் காவல்துறையினர் அனுப்பிய சம்மனை வாங்க மறுத்த அவர் தற்போது தப்பி ஓடிய நிலையில் ஏற்கனவே அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தற்போது நடிகை கஸ்தூரி தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.