தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் கரையை கடந்து வலுவிழந்து நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் மிக அதிக அளவில் கன  மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து 3 மாவட்டங்களில் மிக அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று கனமழையின் காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.