சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது மலேசியாவில் இருந்து சுற்றுலாவுக்காக வந்தவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிக்கு சென்றனர். இவர்கள் சென்ற வேன் மீது தஞ்சையில் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்றவர்களின் கார் திடீரென பயங்கரமாக மோதியது.

இந்தக் கோர விபத்தில் காரில் இருந்த 2 சிறுமிகள் உட்பட 4 வேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் வேனில் வந்தவர்கள் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பிய நிலையில் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்