மத்திய அரசானது ஜூன் 25ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுது 1975ஆம் வருடம்  ஜூன் 25ஆம் தேதியன்று நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த நெருக்கடி கால கட்டத்தில் எந்த தவறும் இல்லாமல், லட்சக்கணக்கான மக்கள் சிறைக்கு சென்றதாகவும், இதை நினைவுபடுத்தும் விதமாக, வருடம்தோறும் இத்தினம் கடைபிடிக்கப்படும் எனவும் அமித்ஷா அறிவித்துள்ளார்.