நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். முன்னதாக இரு மாவட்ட செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் விலகிய நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டசெயலாளர் பூபாலன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதாவது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இப்போதே வேட்பாளர்களை அறிவித்ததன் காரணம் என்ன என்று கேட்ட அவர்  சீமான் கட்சியில் உள்ளவர்களை மதிக்கவில்லை எனவும் கட்சியிலிருந்து போகிறேன் என்று சொன்னால் போனால் போங்கள் என்று கூறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அதோடு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு நிர்வாகி நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் சுதன்ராஜ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவது சீமானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக கூறப்படுகிறது.