கோடை காலத்தையொட்டி காய்கறி விலை உயர்ந்துள்ளது. கிலோ ஒன்றுக்கு ₹60க்கு விற்பனையான பீன்ஸ் தற்போது ₹180க்கும், கிலோ ₹50க்கு விற்பனையான அவரை ₹100க்கும், ₹60க்கு விற்பனையான கேரட் ₹100க்கும் விற்பனையாகிறது. முள்ளங்கி, நூக்கல், முருங்கைக்காய் போன்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு, வெப்பத்தை பயிர்கள் தாங்க முடியாத நிலை போன்றவற்றால் விளைச்சல் குறைந்தால், விலை உயர்ந்துள்ளது.