ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வே.ரா மாரடைப்பால் காலமானார். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதி தொடர்பான அறிவிப் பால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன . அதன்படி கல்வெட்டுகளில் உள்ள தலைவர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டன; வாக்குப்பதிவு மற்றும் விபாட் எந்திரங்கள் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன