ஈரானில் இடைக்கால அதிபராக பதவியேற்ற முகமது மொக்பர் அதிபர் தேர்தல் நடத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாகவும், வரும் ஜூன் 28ஆம் தேதி தேர்தல் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் ரைசி உயிரிழந்த நிலையில் 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும்.