
ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு 2 வழக்குகளை தொடர்ந்தது. இந்த இரண்டு வழக்குகளில் இன்று முக்கிய உத்தரவு வெளியாக வாய்ப்பு இருக்கிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது, துணைவேந்தர் நியமனத்தில் குறுக்கீடு செய்வது குறித்து இரண்டு வழக்குகளை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்தது.
கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஒரு வாரத்தில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் இல்லை எனில் தாங்களே இதற்கு தீர்வு காண முயற்சி செய்வோம் என நீதிமன்றம் கூறியிருந்தது. அந்த வகையில் இன்று இரண்டு வழக்குகளில் முக்கிய உத்தரவு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.