ஆபரண தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்ந்து 54 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 6870 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து 90. 50 க்கும், கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து 90 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.