தமிழகத்தில் ஆதார் அட்டையுடன் மின் கட்டண அட்டையை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தில் பலர் ஆதார் அட்டையுடன் மின் கட்டண அணையை இணைத்து நிலையில் இன்னும் லட்சக்கணக்கானோர் அந்த பணியை செய்யவில்லை. இந்நிலையில் இன்றுடன் தமிழகத்தில் ஆதார் மின் இணைப்புக்கான கால அவகாசம் நிறைவடையும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.

அவர் பேசியதாவது, இதுவரை 2.59 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் மொத்த மின் இணைப்புகளில் 97.07 சதவீதமாகும். மேலும் கடைசி நாளான இன்று மீதமுள்ளவர்களும் உடனடியாக ஆதார் உடன் மின் இணைப்பை இணைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.