ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் நிலையில், தற்போது அதிமுக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது.

கடந்த முறை விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடவில்லை. இதைத் தொடர்ந்து தற்போது ஈரோடு இடைத்தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது தேமுதிக கட்சியும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது. மேலும் கடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக கட்சி வரும் 1432 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.