
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் கடந்த வருடம் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் உள்ள டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவிலும் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சஞ்சய்ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் 162 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு 120 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் தான் குற்றவாளி என்று கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் தண்டனை விவரம் வருகிற 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.