பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்து தெரிவித்தார். இது குறித்த அவர் கூறியதாவது, தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தின் போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஏற்றமாகவும் அண்ணன் துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என்றார். யாரெல்லாம் ஏற்றம் பெறப் போகிறார்கள். யாரெல்லாம் ஏமாறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் கண்டிப்பாக எல்லோருக்கும் ஏற்றத்தை கொடுக்காது. பலருக்கு ஏமாற்றத்தை தான் கொடுக்கும். உதயநிதி ஸ்டாலினுக்கு முடி சூட்டுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இது போன்ற வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு நல்லது கிடையாது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 17 என்கவுண்டர்கள் நடந்துள்ளது. என்கவுண்டர்கள் அதிகமாக நடப்பதால் யாரை காப்பாற்றுவதற்காக இது நடக்கிறது என்பது தெரியவில்லை. மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது என்று கூறினார்.